weather

img

குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்கியதிலிருந்தே தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி மாவட்டங்களில் அடிக்கடி கனமழை பெய்துவருகிறது.
இந்நிலையில், வடக்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய வங்கதேசம், மேற்கு வங்கம் கடற்கரை பகுதியில் வருகின்ற ஜூலை 24 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி படிப்படியாக வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.